தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-15 17:40 GMT
வால்பாறை

வால்பாறை நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் வேட்பாளர்கள் ஒட்டுக்காக பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு கேரள மாநிலம் வழியாக பணம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தமிழக-கேரள எல்லையில் மளுக்கப்பாறை பகுதியில் உள்ள சேக்கல்முடி சோதனைச்சாவடியில் தமிழக போலீசார் மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை முழுமையாக சோதனை செய்து அவர்களின் முழு விவரங்களை சேகரித்த பின்னரே வால்பாறை பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்