நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடுப்பட்டுள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-02-15 17:10 GMT
வெளிப்பாளையம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுப்பட்டுள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
நாகை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுபான பார்கள், தனியார் மதுபானபார்கள் ஆகியவைகளுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது.
 மது விற்பனை செய்தால் நடவடிக்கை
அதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.இதை மீறி மதுவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்