திண்டுக்கல் அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் 2 வாலிபர்கள் பலி

திண்டுக்கல் அருகே பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-02-15 15:57 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் வசந்தபாண்டி (வயது 32). இவர் சீலப்பாடியில் உள்ள தனியார் பேக்கரியில் காசாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி யாழினி (30) என்ற மனைவியும், 2½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவரும் திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே உள்ள செட்டியபட்டியை சேர்ந்த  பிரகாஷ்ராஜும்(25) நண்பர்கள். இவர் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 
பிரகாஷ்ராஜ் நேற்று முன்தினம் வசந்தபாண்டியை சந்திப்பதற்காக திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து செட்டியபட்டி செல்வதற்காக வசந்தபாண்டியும், பிரகாஷ்ராஜும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-திருச்சி சாலையில் சென்றனர். மோட்டார் சைக்கிளை வசந்தபாண்டி ஓட்டினார். முள்ளிப்பாடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சந்தனவர்த்தினி ஆற்றின் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது.
பலி
இந்த விபத்தில் 2 ேபரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே வசந்தபாண்டி பரிதாபமாக இறந்தார். பிரகாஷ்ராஜ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவரும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது மிகவும் உருக்கமாக  இருந்தது. 

மேலும் செய்திகள்