பழனி அருகே மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானை பொதுமக்கள் அச்சம்

பழனி அருகே கொடைக்கானல் மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-02-15 15:51 GMT
பழனி:
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளும், அரியவகை மரங்கள், மூலிகை செடிகளும் உள்ளன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள தேக்கந்தோட்டம் பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இரவு நேரங்களில் உலா வரும் யானை அங்குள்ள தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகிறது. பின்னர் பகலில் அவை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் வனத்துறையினர் தேக்கந்தோட்டம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
இதுகுறித்து வனச்சரகர் பழனிகுமார் கூறுகையில், ஒற்றை யானையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். யானை நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாறாக எவ்வித சத்தமும் எழுப்பி யானையை தொந்தரவு செய்ய வேண்டாம். யானைகளை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. தோட்ட பகுதிகளில் யானைகள் வருவதை தடுக்க பிரத்யேக விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்