கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Update: 2022-02-15 15:04 GMT
வடமதுரை:
அய்யலூர் அருகே உள்ள தோப்புப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். விவசாயி. இவர் தனது தோட்டத்து வீட்டில் பசுக்களை வளர்த்து வருகிறார். நேற்று வேல்முருகன் வளர்த்த பசு ஒன்று தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் அந்த பசு தத்தளித்து கொண்டிருந்தது.  
இதுகுறித்து வேல்முருகன் வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜோதிராமலிங்கம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனர்.

மேலும் செய்திகள்