கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்று விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்று விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கருமத்தம்பட்டி
கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்று விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலைநிறுத்தம்
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு கிடைக்க வில்லை.
எனவே கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 37 நாட்களாக விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் சோமனூரை அடுத்த கோம்பக்காடு புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கு சோமனூர் சங்க தலைவர் சி.பழனிச்சாமி தலைமை தாங்கி னார். செயலாளர் பி.குமாரசாமி, துணைத்தலைவர் ப.கோபாலகிருஷ் ணன், துணைச் செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொழில் நிலை, கூலி உயர்வு, போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
தொடர் உண்ணாவிரதம்
அரசு அறிவித்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்காமல் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கின்றனர்.
அதை கைவிட்டு ஒப்பந்தத்தில் கையொழுத்திட்டு கூலி உயர்வை அமலாக்க வேண்டும். இதை செயல்படுத்தி விசைத்தறியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்.
கூலி உயர்வு பிரச்சினை போராட்டத்தில் முடிவு கிடைக்கும் வரை அனைத்து விசைத்தறி உரிமையாளர்களும் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் இருப்பது,
குடும்பத்துடன் பங்கேற்பு
இந்த விவகாரத்தில் தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக தலை யிட்டு 8 ஆண்டுகளாக கூலி உயர்வின்றி வாழ்வாதாரம் இழந்து நிற்கும் விசைத்தறியாளர்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.
மேலும் கூலி உயர்வு போராட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை பாது காக்க தலைமை சங்கம் அறிவிக்கும் போராட்டங்களில் விசைத்தறியா ளர்கள் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.