கம்யூனிஸ்டு கட்சிகளை பற்றி விமர்சிக்க அண்ணாமலைக்கு உரிமை இல்லை

கம்யூனிஸ்டு கட்சிகளை பற்றி விமர்சிக்க அண்ணாமலைக்கு உரிமை இல்லை

Update: 2022-02-15 13:33 GMT
திருப்பூர்,
கடம் மனு ம்யூனிஸ்டுகளை பற்றி பேச பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு உரிமை இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருப்பூரில் கூறினார்.
பிரசாரம்
திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக திருப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது 
கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2016 ம் ஆண்டு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். அதன்பிறகு 2021  ஆண்டாவது தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். அந்த தேர்தல்களை நடத்தாமல் விட்டதன் விளைவு, உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் போய்விட்டது. அதிகாரிகள், ஆளும்கட்சியினர், அமைச்சர் ஆகியோர் அந்த அதிகாரத்தை பயன்படுத்தினார்கள்.
சமூகநீதி நிலைநாட்டப்படும்
தி.மு.க. ஆட்சி அமைந்த 9 மாதங்களில் 9 மாவட்ட ஊராட்சி தேர்தலை நடத்தியதோடு அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த உள்ளது. இந்த தேர்தல் நடத்துவதன் மூலமாக அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கிற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலமாக சமூகநீதி நிலைநாட்டப்படும். தமிழக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெருமளவுக்கு ஊழல் தலை விரித்தாடியுள்ளது. அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு மாநகராட்சி, நகராட்சிகளில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை பட்டியலிட்டு ஏற்கனவே ஊழல் தடுப்புதுறையிகொடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காததால் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். உள்ளாட்சி நிர்வாகம் மிக மோசமாக போய்விட்டது. நகர்ப்புற மருத்துவமனைகள், ஆயாக்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களை பணியமர்த்துவதற்கு பணம் பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கையால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி.யால் ஆயத்த ஆடை தொழில் நலிவடைந்து போய்விட்டது. ஜவுளித்தொழில் கேள்விக்குறியாக மாறிவிட்டது. ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதற்கு முன்னணி பாத்திரமாக கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் பணியாற்றுவார்கள்.
கத்துக்குட்டி
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு கத்துக்குட்டி. அவருக்கு கம்யூனிஸ்டுகளின் பாரம்பரியம் பற்றி என்ன தெரியும்?. இந்த நாட்டின் வரலாறு தெரிந்தவர்கள் அவ்வாறு பேசமாட்டார்கள். கம்யூனிஸ்டுகள் நாட்டு விடுதலை போராட்டத்தில் எத்தனை தியாகம் செய்தார்கள். மகத்தான போராட்டங்களை நடத்தி நாட்டுக்கு விடுதலை வாங்கி கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
குஜராத்தில் தனியார் கப்பல் கட்டும் தனியார் நிறுவனம் ரூ.22 ஆயிரத்து 800 கோடி அரசு வங்கி பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி இருக்கிறது. 2013ம் ஆண்டு போட்ட இந்த வழக்கை சி.பி.ஐ. இன்னும் விசாரித்துக்கொண்டிருக்கிறது. ஏன் இந்த தாமதம். ஆனால் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அறிவிக்கின்றனர். இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்ல போகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்