குடிபோதையில் சாமி சிலையை உடைத்த 2 பேர் கைது

குடிபோதையில் சாமி சிலையை உடைத்த 2 பேர் கைது

Update: 2022-02-15 13:27 GMT
காங்கேயம் அருகே குடி போதையில் சாமி சிலையை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மாரியம்மன் சிலை உடைப்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தம்மரெட்டிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் மண்ணால் ஆன மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்  கோவிக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வந்தனர். 
இந்த நிலையில் நேற்று காலை கோவில் முன்பு இருந்த மாரியம்மன் சிலை 3 பாகங்களாக உடைந்து கிடந்தது.  இதனைக் கண்ட கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு  போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது 
விசாரணையில் மாரியம்மன் சிலையை ஒட்டப்பபாளையத்தில் உள்ள பிரியாணி கடையில் வேைல பார்த்து வரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா புதுஆயக்குடியை சேர்ந்த சாகுல் ஹமீது  27 மற்றும் முகமது சாதிக்பாட்சா 22 என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள்  2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
மேலும் இவர்கள்  2 பேரும் 2 பேரும் குடிபோதையில் சாமி சிலையை உடைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான  2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்