தூத்துக்குடியில் கடல்பாசி அறுவடை

தூத்துக்குடியில் கடல்பாசி அறுவடை நடந்தது

Update: 2022-02-15 12:51 GMT
தூத்துக்குடி:
கல்வி நிறுவனங்களில் புதுமை மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை வளர்த்தெடுக்க பல்கலைக்கழக மானியக் குழுவால் ஸ்ட்ரைட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கடலோர கிராமங்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு என்ற கருத்தை மையமாக கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தூத்துக்குடியில் உள்ள கம்பிவேலி எனும் இடத்தில் வாழும் மக்களின் பொருளாதார நிலை மேம்பாட்டுக்காக கடல்பாசி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முறையான பயிற்சிகளுக்கு பின் அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக கடல்பாசி விதைகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த மக்கள் கடல்பாசியை வளர்த்தனர். நன்கு வளர்ச்சி பெற்ற கடல் பாசியை அறுவடை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. 
நிகழ்ச்சிக்கு வ.உ.சி கல்லூரி ஸ்ட்ரைட் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ராதிகா தலைமை தாங்கினார். சிறப்பாக கடல் பாசி வளர்த்த மக்களை பாராட்டினர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்