பொதுஇடங்களில் முககவசம் அணியாத 141 பேருக்கு அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாத 141 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2022-02-15 12:20 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் முக கவசம் அணியாத 141 பேருக்கு போலீசார் தலா ரூ.200 வீதம் ரூ.28 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினர்.

மேலும் செய்திகள்