போலீசார் கொடி அணிவகுப்பு

போலீசார் கொடி அணிவகுப்பு

Update: 2022-02-15 11:18 GMT
தமிழகத்தில் வருகிற 19 ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குன்னத்தூர் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் குன்னத்தூர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் தலைமை தாங்கினார். அணிவகுப்பில் அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரஸ்வதி, கீதா, வெங்கடேஸ்வரி, குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் அம்பிகா, பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் பல்வேறு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், குன்னத்தூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் கலந்துகொண்டார்கள்.‌ போலீசாரின் கொடி அணிவகுப்பு குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஊத்துக்குளி ரோடு, கோபி ரோடு, பெருமாநல்லூர் ரோடு, கருங்கல்மேடு, ஆதியூர் பிரிவு வரை சென்று விட்டு மீண்டும் போலீஸ் நிலையம் வந்தடைந்தது.

மேலும் செய்திகள்