மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி சாவு
மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.;
அரியலூர்:
கட்டுமான பணி
அரியலூரில் கடந்த ஒரு ஆண்டாக அரசு மருத்துவ கல்லூரி கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் லிப்ட் பொருத்தும் பணியில் பலர் ஈடுபட்டனர்.
மின்சாரம் பாய்ந்து சாவு
அப்போது அந்த பணியில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த வாலிபர், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிர்கும் என்ற ஊரை சேர்ந்த ஆசேஸ் தாஸ்(வயது 19) என்பது தெரியவந்தது. இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.