சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.

சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

Update: 2022-02-14 21:01 GMT
உசிலம்பட்டி
சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
பிரதோஷ பூஜை
உசிலம்பட்டி அருகே உள்ளது ஆனையூர். இந்த ஊரில் பழமை வாய்ந்த ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. மேற்கு பார்த்து உள்ள இந்த ஆலயத்தில் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன. இதில் ஐராவதீஸ்வரர் பிரதோஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வணங்கினர்.
வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும், பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நேற்று நடந்தது. பிரதோஷத்தையொட்டி சுந்தரேஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பின் சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் பல்லக்கில் கோவிலை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இந்த பூஜைகளை பட்டர் கிருஷ்ணகுமார் செய்திருந்தார். அதேபோல் குட்லாடம்பட்டியில் கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பின் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் பல்லக்கில் கோவிலை சுற்றி உலா வந்தனர்.
சிறப்பு அபிஷேகம்
பாலமேடு பஸ் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவிலில் மாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதில் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம், வில்வ இலை, உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். இதைபோல் அலங்காநல்லூரில் உள்ள கோவில்களிலும் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை விட்டவாசல் மகாமுனீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதலாம் நாளான நேற்று பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் மகா முனீஸ்பரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்