பேனர் விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு

பேனர் விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு

Update: 2022-02-14 21:01 GMT
மதுரை
புதுக்கோட்டை அம்மானிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சாமிகண்ணு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் ஒரு மாற்றுத்திறனாளி. 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். எனது மனைவி விஜயராணி.
சமீபத்தில் அவரது சகோதரர் இறந்ததற்காக, 8-ம் நாள் காரியத்திற்கு சென்ற எனது மனைவி, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். மேட்டுப்பட்டி பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் திடீரென எனது மனைவி மீது சாய்ந்தது. இதில் எனது மனைவி படுகாயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரது இறப்பிற்கு பின்பு நானும், எனது பிள்ளைகளும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனது மனைவி இறப்புக்கு காரணமானவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்