நகைகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்
கூட்டுறவு வங்கியில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.
காரியாபட்டி,
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் நகைக்கடன் தள்ளுபடியான பயனாளிகளுக்கு நகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் கலந்து கொண்டு நகைகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திருச்சுழி யூனியன் தலைவர் பொண்ணு தம்பி, திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தன பாண்டியன், திருச்சுழி யூனியன் துணைத்தலைவர் மூக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.