முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகரில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-14 19:51 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாவட்ட தலைவர் முத்தையா தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த கூடாது என வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மேலும் செய்திகள்