கீரமங்கலம்
கீரமங்கலம் பேரூராட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒரு வார்டில் போட்டுயிடும் வேட்பாளருக்கு பஸ் நிலையம் அருகே கந்தர்வகோட்டை தொகுதி சின்னத்துரை எம்.எல்.ஏ. தெருமுனை பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில், அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்றாக திரண்டு பேரூராட்சி அலுவலகம் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்து விட்டு எங்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று கேட்டனர். பின்னர், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உரிய அனுமதி பெற்ற பிறகுதான் கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரம் செய்வதாகவும், அதற்கான மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கடிதத்தையும் காட்டிய பிறகே தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. வேட்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.