அதிகாரிகளை பார்த்ததும் ரூ.39 ஆயிரத்தை வீசிவிட்டு தப்பிய சுயேச்சை வேட்பாளர்
சாத்தூரில் அதிகாரியை கண்டதும் சுயேச்சை வேட்பாளர் ரூ.39 ஆயிரத்தை வீசி விட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தூர்,
சாத்தூரில் அதிகாரியை கண்டதும் சுயேச்சை வேட்பாளர் ரூ.39 ஆயிரத்தை வீசி விட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்காளர்களுக்கு பணம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சிவகாசி துணை தாசில்தார் ஜெயபாண்டியன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்ேபாது சாத்தூர் 3-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்றனர்.
தப்பி ஓட்டம்
அப்போது அங்கு சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.38,500-யை கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் பணத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.