அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

Update: 2022-02-14 19:23 GMT
சமயபுரம், பிப்.15-
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது 60). இவர் நேற்று முன்தினம் பக்கத்து ஊரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று இருந்தார். திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோவில் இருந்த ரூ.2,800  மற்றும் 1 கிராம் தங்கம் திருடப்பட்டு இருந்தது. இதேபோல், வள்ளியம்மைக்கு சொந்தமான பக்கத்து வீட்டில் சாமிநாதன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் கோவையில் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவருடைய மனைவி அபிராமி (38), 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலும்  மர்ம நபர்கள் ரூ.40 ஆயிரம் மற்றும் 50 கிராம் வெள்ளியை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்