வெறிநாய் கடித்து 10 பேர் படுகாயம்

சிங்கம்புணரியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

Update: 2022-02-14 19:04 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.


வெறிநாய் தொல்லை

சிங்கம்புணரி நகர் பாலாற்றங்கரையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது நாய் தொல்லைகளால் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் சிங்கம்புணரி அம்பேத்கர் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்ததில் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன்(வயது 60), கோழிகுடிப்பட்டி நிதுரன்(9), அரசினம்பட்டி கீ்ர்த்தனா(13), மணப்பட்டி சுசீலா(34), கண்ணமங்கலபட்டி காஸ்வி(8), பஞ்சுவர்ணம்(60) உள்ளிட்ட 10 பேரை கடித்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 10 பேரையும், அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தடுப்பூசி போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, சிங்கம்புணரி பகுதியில் தெருநாய் தொல்லை அதிகரித்து விட்டது. தற்போது வெறிநாய் கடித்து 10 பேர் காயம் அடைந்து உள்ளனர். எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்