யானை தந்தத்தால் செய்த உபகரணங்கள், மான் கொம்புகள் பறிமுதல்

காரைக்குடியில் கலைப்பொருட்கள் விற்பனை கடைகளில் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் யானை தந்தத்தால் செய்த உபகரணங்கள், மான் ெகாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 8 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.;

Update: 2022-02-14 18:47 GMT
காரைக்குடி, 

காரைக்குடியில் கலைப்பொருட்கள் விற்பனை கடைகளில் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் யானை தந்தத்தால் செய்த உபகரணங்கள், மான் ெகாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 8 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

வனத்துறையினர் அதிரடி சோதனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கல்லுகட்டி பகுதியில் உள்ள பழைய மரக்கடை மற்றும் கலைப்ெபாருட்கள் விற்பனை கடைகளில் நேற்று சென்னையில் இருந்து வந்த வனத்துறை நுண்ணறிவு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினார்கள். அவர்களுடன் சிவகங்கை, காரைக்குடி வனத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
அப்போது அந்த கடைகளில் இருந்து 24 மான்கொம்புகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட கத்தி கைப்பிடி உள்ளிட்ட உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

8 பேரை பிடித்து விசாரணை 

இது தொடர்பாக கடை வியாபாரிகள் 8 பேைர வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சிவகங்கை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் கைப்பற்றப்பட்ட விலைமதிப்பு மிக்க பொருட்கள் பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்