கூத்தாநல்லூர், திருமக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை

கூத்தாநல்லூர், திருமக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

Update: 2022-02-14 18:34 GMT
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர், திருமக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டது.
பரவலாக மழை
கூத்தாநல்லூரில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.அவ்வப்போது இருள் சூழ்ந்த நிலை தென்பட்டது. இதனையடுத்து பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல, வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி, வாழச்சேரி, மரக்கடை, விழல்கோட்டகம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.அப்போது குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
திருமக்கோட்டை
இதேபோல திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வல்லூர், மேலநத்தம், கோவிந்தநத்தம், சமுதாயம், பாளையக்கோட்டை தென்பரை, கழிச்சாங்கோட்டை, பாவாஜி கோட்டை, எளவனூர், கன்னியாகுறிச்சி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. 
3 நாட்களாக பெய்யும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அறுவடை எந்திரம் வயலுக்குள் செல்ல முடியாமல் சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நனைந்து முளைத்துவிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்