வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-02-14 18:34 GMT
வேலூர்

வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர் மண்டித்தெருவில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றார். இது குறித்து வெங்கடேசன் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது காகிதப்பட்டறையை சேர்ந்த பிரசாந்த் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல ரங்காபுரத்தை சேர்ந்த வாலிபரிடம், மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றதாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தனேரியை சேர்ந்த மணிகண்டன் (44) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்