நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனம். கலெக்டர், தேர்தல் பார்வையாளர் தொடங்கி வைத்தனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் தொடங்கிவைத்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா, தேர்தல் பார்வையாளர் எம்.பிரதீப் குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஒரு விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தினை வேன் மூலம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை நகராட்சி, நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று (செவ்வய்க்கிழமை) ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சி, வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சி பகுதியில் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்படுகிறது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.