அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் விறகு கட்டையால் அடித்துக் கொலை
அரக்கோணத்தில் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் விறகு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் விறகு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கால்வாயில் பிணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் லைன் தெரு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர். அப்போது கால்வாயில் பிணமாக கிடந்தவர் அரக்கோணம் மசூதி தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 38) என்பதும், தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வெளியூரில் உள்ளனர். ஜாகிர் உசேன், அம்மா, அப்பாவுடன் சில நாட்களும், சகோதரர்கள் வீட்டில் சில நாட்களும் தங்கி வந்தது தெரிய வந்தது.
அடித்துக் கொலை
ஜாகிர் உசேன் பிணமாக கிடந்தது குறித்து மசூதி தெருவை சேர்ந்த சாலேஷா என்கிற சாலி (23), கமலேஷ் (22) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரனை நடத்தினர். அப்போது ஜாகிர் உசேனுடன் நேற்று முன்தினம் இரவு மது அருந்தியபோது மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் அருகில் இருந்த விறகு கட்டையால் ஜாகிர் உசேனை தாக்கியதில் அங்கு இருந்த கால்வாயில் விழுந்து மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவுசெய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.