அரக்கோணம் நகராட்சியில்மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு

அரக்கோணம் நகராட்சியில்மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-14 18:33 GMT
அரக்கோணம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளின் உறுப்பினர் பதவிக்கு 161 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. நேற்று அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரும் தேர்தல் அலுவலருமான லதா தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், பொறியாளர் ஆசிர்வாதம், சுகாதார அலுவலர் செந்தில் குமார் மற்றும் வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்