கள்ளக்காதலியின் மகன் அடித்துக்கொலை

தூசி அருகே கள்ளக்காதலியின் மகனை அடித்துக்கொன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-14 18:21 GMT
தூசி

தூசி அருகே கள்ளக்காதலியின் மகனை அடித்துக்கொன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நர்மதா. இவர்களுக்கு நித்திஷ் (வயது 6), சித்தார்த்தா (4) என்ற இரு மகன்கள் உண்டு. நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். 

இந்த நிலையில் நர்மதாவுக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வினோத்குமார் தனியார் வங்கி ஒன்றில் நிதி வசூல் செய்யும் வேலை செய்து வந்தார்.

நர்மதாவும், வினோத்குமாரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செய்யாறு சிப்காட் கம்பெனியில் நர்மதா வேலைக்கு சேர்ந்தார். இதனால் செய்யாறு அருகே உள்ள ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
 
சிறுவன் அடித்துக்கொலை

நர்மதா நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் குழந்தைகள் இருவரும் இருந்துள்ளனர். மாலையில் நர்மதா வேலை முடிந்து வீடு திரும்பியபோது மகன் சித்தார்த்தா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தான். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மகனை மீட்டு சிகிச்சைக்காக மாமண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.

 அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நர்மதா தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை விசாரணை நடத்தினார். விசாரணையில் கள்ளக்காதலன் வினோத்குமார் சித்தார்த்தாவை சுவரில் அடித்து கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்