காதல் திருமண ஜோடி தஞ்சம்

காதல் திருமண ஜோடி தஞ்சம்

Update: 2022-02-14 18:12 GMT
மயிலாடுதுறை;
சீர்காழி அருகே மாதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (வயது 29). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். சீர்காழி அருகே குமரக்கோட்டம் கிராமத்தை சேர்ந்தவ சம்பந்தம் மகள் விஜயலட்சுமி (வயது 25). இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 
   இவர்களது காதலுக்கு  எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில்  நேற்று காலை சிவசண்முகமும், விஜயலட்சுமியும் வீட்டைவிட்டுக் கிளம்பி வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று  திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு 
 மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.  இவர்கள் இருவரும் வசிக்கும் பகுதி புதுப்பட்டினம் போலீஸ் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்  புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திராவை அழைத்து காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்கவும் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும்  உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து காதல் திருமண ஜோடி போலீஸ் வாகனத்தில் இன்ஸ்பெக்டருடன் சென்றனர்.  காதலர் தினமான நேற்று தங்களின் 7 ஆண்டு கால காதல் வெற்றி பெற்றதாக காதல் திருமண ஜோடியினர் மகிழ்ச்சியுடன் கூறினர். 

மேலும் செய்திகள்