வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-14 17:50 GMT
கரூர்
கரூர்
கரூர் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 24). இவர் கடந்த 4 ஆண்டுகளாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கதிர்வேல்  வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து  தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். 
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்