வாக்குப்பதிவு மையங்களை கலெக்டர் ஆய்வு
கீழ்வேளூர் பேரூராட்சியில் வாக்குப்பதிவு மையங்களை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
சிக்கல், பிப்.15-
கீழ்வேளூர் பேரூராட்சியில் வாக்குப்பதிவு மையங்களை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 15 வார்டுகளில் மொத்தம் 49 பேர் போட்டியிடுகின்றனர். பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 4 இடங்களில் 15 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை பார்வையிட்டார்.
அடிப்படை வசதிகள்
பின்னர் நாகை - திருவாரூர் சாலையில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டருடன் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.