வெண்ணந்தூரில் கார் மோதி மூதாட்டி பலி
வெண்ணந்தூரில் கார் மோதி மூதாட்டி பலி
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் செக்கான்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி மாரியம்மாள் (வயது 65). இவர் நேற்று காலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மாரியம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காரை ஓட்டி வந்த ஈரோட்டை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவர் லேசான காயம் அடைந்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மூதாட்டியின் மகன் கோபால் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.