மூங்கில்துறைப்பட்டு அருகே பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

மூங்கில்துறைப்பட்டு அருகே பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்;

Update: 2022-02-14 16:03 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே பாக்கம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் நாடி சந்தானம் பார்க்கப்பட்டு  தத்துவவார்ச்சனை யாத்ரா தானம் நடைபெற்றது. 
பின்னர் நேற்று காலை 9.30 மணி அளவில் யாகசாலையில் இருந்து மேள-தாள இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று 10 மணிக்கு கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது டிரோன் மூலம் பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கிராமத்தின் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்