மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் சாவு

மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2022-02-14 13:02 GMT
பொள்ளாச்சி

மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் சின்ன பெருமாள். இவரது மகன் தினேஷ்குகுமார் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்த கவுதம் (22). இவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நண்பர்கள் 2 பேரும் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நஞ்சேகவுண்டன்புதூரில் சென்ற போது சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

போலீசார் விசாரணை

இதில் தூக்கி வீசப்பட்டத்தில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து வாலிபர்கள் 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்