ஏற்காட்டில் தங்கும் விடுதியில் சமையல் மாஸ்டர் தற்கொலை
ஏற்காட்டில் தங்கும் விடுதியில் சமையல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்காடு:
ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சமையல் மாஸ்டராக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் பகுதியை சேர்ந்த சுதீர் சங்கர் (வயது 40) என்பவர் பணியாற்றி வந்தார். மேலும் இவர் தனது மனைவியை பிரிந்து, பெற்றோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டு செலவுக்கு சரியாக பணம் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் சுதீஷ் சங்கரின் பெற்றோர் பணம் கேட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த சுதீர் சங்கர் தங்கும் விடுதியின் வரவேற்பாளர் அறையில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஏற்காடு போலீசார், சுதீஷ் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.