பெண்ணை கர்ப்பமாக்கிய ஆடு மேய்க்கும் தொழிலாளி கைது
பெண்ணை கர்ப்பமாக்கிய ஆடு மேய்க்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், க.எறையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜி(வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிந்து ராஜியை கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தார்.