சத்தி அருகே தோட்டத்தில் தீ விபத்து; 700 வாழைகள் நாசம்
சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 700 வாழைகள் நாசம் ஆனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 700 வாழைகள் நாசம் ஆனது.
தீ விபத்து
சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூரில் வசித்து வருபவர் மோகன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 4 ஏக்கரில் செவ்வாழை பயிரிட்டு உள்ளார். தோட்டத்தின் நடுவே மின்சார துறை சார்பில் டிரான்ஸ்பார்மர் நடப்பட்டு அதிலிருந்து கொமராபாளையம் ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென வாழை மரங்கள் தீப்பற்றி கருக தொடங்கின.இதை பார்த்த மோகன் உடனே சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
வாழைகள் நாசம்
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 700 வாழைகள் கருகி நாசம் அடைந்தன.
மின்கசிவே இந்த தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.