திம்பத்தில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை: தொடர் போராட்டம் நடத்த முடிவு

திம்பத்தில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-02-13 20:48 GMT
தாளவாடி
திம்பத்தில் இரவு நேர போக்குவரத்துக்கு     தடை  விதிக்கப்பட்டுள்ளதால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பண்ணாரி முதல் திம்பம் வரை இரவு நேர போக்குவரத்துக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது.   
அதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி  முதல்   இந்த  இரவு நேர தடை   அமலுக்கு   வந் தது. 
இதை எதிர்த்து தாளவாடி பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டம்
இந்த நிலையில் தடை விதித்ததால் அடுத்து தொடர் போராட்டம் நடத்துவது குறித்து தாளவாடியில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 
கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார்.  
இதில் 15-ந் தேதி (நாளை) கூறப்படும் கோர்ட்டு தீர்ப்பில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரவில்லையென்றால் அடுத்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 
கூட்டத்தில் தாளவாடி பகுதி பொதுமக்கள், விவசாயிகள், வியாபார சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்