திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்ற 198 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர். ஆனால், திருச்சியில் கொரோனா தொற்றுக்கு நேற்று 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், கொரோனாவுக்கு 1,156 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,577 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.