பூத் சிலிப் வினியோகம் தொடங்கியது

சிவகாசி மாநகராட்சி பகுதியில் பூத்சிலிப் வினியோகம் தொடங்கியது.

Update: 2022-02-13 20:34 GMT
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி பகுதியில் பூத்சிலிப் வினியோகம் தொடங்கியது.
வாக்கு சேகரிப்பு 
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தீவிரமடைந்துள்ள நிலையில் சிவகாசியில் மாநகராட்சி பகுதியிலும் தேர்தல் களை கட்ட தொடங்கியுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 48 வார்டுகளிலும் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 148 வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. 
சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த பூத் சிலிப்புகளை 80 தேர்தல் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் கொடுத்து வருகிறார்கள். 
80 பேர் நியமனம் 
இந்த பணிகளை 12 மேற்பார்வையாளர்கள் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள். சிவகாசி மாநகராட்சி பகுதியில் 2 நாட்களில் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, சிவகாசி பகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பூத் சிலிப் கொடுக்க 80 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் அனைவருக்கும் பூத் சிலிப்களை வழங்கி விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்