போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய லாட்டரி வியாபாரி கைது
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய லாட்டரி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.;
அச்சன்புதூர்:
கடையநல்லூர் சொக்கம்பட்டி அருகே திரிகூடபுரம் பகுதியில் கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 58) என்பவரை கைது செய்ய முயன்றார். அப்போது அவர் சப்-இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.