பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
மதுரையில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பன்னீர்செல்வம் (வயது56) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.61 ஆயிரத்து 130 பறிமுதல் செய்தனர்.