தொழிலாளியை மிரட்டியவர் கைது

நெல்லை டவுனில் தொழிலாளியை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-13 19:13 GMT
நெல்லை:
நெல்லை டவுன் ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகு (வயது 32). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சத்திரம் புதுக்குளம் பகுதியை சேர்ந்த அருண் (38) என்பவர் தியாகுவிடம் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்