திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி

மாசிமாத பிறப்பையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.

Update: 2022-02-13 18:57 GMT
திருவெண்காடு:
பிரசித்தி பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனின் மூன்று கண்களில் இருந்து தோன்றிய தீப்பொறிகளால் மூன்று குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. அவை சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மூன்று குளங்களில் நேற்று மாசி மாத பிறப்பையொட்டி தீர்த்தவாரி நடந்தது. மேளதாளம் முழங்க அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்