படைவெட்டி மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
மயிலாடுதுறை சேந்தங்குடியில் படைவெட்டி மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சேந்தங்குடியில் படைவெட்டி மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பால்குட திருவிழா
மயிலாடுதுறை சேர்ந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோவிலில் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டுதோறும் பால்குட திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று படைவெட்டி மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.
முன்னதாக துலாககட்ட காவிரிக்கரையில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு காப்புகள் கட்டப்பட்டன. பின்னர் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பால் குடங்களை தலையில் சுமந்து அங்கிருந்து புறப்பட்டனர். பின்னர் பக்தர்களின் வீதியுலா நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம்
அப்போது வழிநெடுக பால்குடங்களை ஏந்தி வந்த பக்தர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றி வரவேற்பு அளித்தனர். பட்டமங்கலத்தெரு, கார்டெக்ஸ், சீர்காழி சாலை வழியாக பால்குடங்களை சுமந்து சென்ற பக்தர்கள் பின்னர் கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து படைவெட்டி மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.