வெடி தயாரிக்கும் பொருட்கள் கொண்டு சென்றவர் கைது

திருவண்ணாமலையில் வெடி பொருட்கள் கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-02-13 18:31 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், கீழ்பென்னாத்தூர் தாலுகா கருங்குணம் பகுதியை சேர்ந்த முன்வர் (வயது 42) என்பது தொியவந்தது. 

மேலும் அவர்  வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை பவுடர் 25 கிலோ, கேமிக்கல் சால்ட் 25 கிலோ, அலுமினியம் பவுடர் 10 கிலோ கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து முன்வரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்