வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தது. கலெக்டர் வரவேற்றார்.
வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தது. கலெக்டர் வரவேற்றார்.
அணைக்கட்டு
சென்னையில் நடந்த குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந் அலங்கார ஊர்தி நேற்று வேலூர் மாவட்டத்துக்கு வந்தது.
வேலூர் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம் ஊராட்சிக்கு நேற்று மாலை 5.15 மணிக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணுபிரியா, தனஞ்செழியன், திட்ட இயக்குனர் ஆர்த்தி, தாசில்தார்கள் விநாயகமூர்த்தி, லலிதா. அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், மண்டல துணை தாசில்தார் திருக்குமரன் உள்ளிட்டோர் மலர்தூவி வரவேற்றனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அணைக்கட்டு ஒன்றியம் கழனிபார்க்க ஊராட்சியில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மாலை 3 மணிக்கு கழனிபாகத்தில் இருந்துபுறப்பட்டு காட்பாடி, வள்ளிமலையில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்படும். இதனை அடுத்து திருவலம் பகுதியில் மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.