38 மாவட்டங்களின் பெயர்களை கூறிய 2-ம் வகுப்பு மாணவி. கலெக்டர் பாராட்டு
38 மாவட்டங்களின் பெயர்களை கூறிய 2-ம் வகுப்பு மாணவியை கலெக்டர் பாராட்டினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பரதராமியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ச.கனிஷ்கா ஷிவானி என்ற மாணவிக்கு உலக சாதனைகளை பதிவு செய்யும் ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பு, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்களை 17 நொடிகளில் உச்சரித்ததை புதிய உலக சாதனையாக பதிவு செய்தது.
கடந்த மாதம் இதனை சாதனையாக அறிவித்து மாணவி கனிஷ்கா ஷிவானிக்கு அதற்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி பாராட்டியுள்ளது.
ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனையை வென்ற மாணவியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டி வாழ்த்தினார்.