வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி செயல் அலுவலர் தலைமையில் நடந்தது.
சீர்காழி:
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 15 வார்டுகளின் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி செயல் அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் நடந்தது.
இதில் வேட்பாளர் முன்னிலையில் வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.