திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில் தேரோட்டம்
திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.;
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தில் அஞ்சனாட்சியம்மாள் சமேத மணிகண்டீசுவரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. தினமும் சூரிய பிரபை, பூத வாகனம், சேஷ வாகனம், அதிகார நந்தி ஆகிய வாகனங்களிலும் மற்றும் அறுபத்தி மூவர் வீதி உலா நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. பல்வேறு வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.