செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருவண்ணாமலையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-02-13 18:24 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை பே கோபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 32), டிரைவர். இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது அவரிடம் ஒருவர் செல்போன் விற்பனைக்காக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் கருணாகரன் ரூ.15 ஆயி
ரத்திற்கு 2 செல்போன் வாங்கியுள்ளார்.

பின்னர் கருணாகரன் அங்கிருந்து சென்று அப்பகுதியில் உள்ள முருகர் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 3 பேர் திடீரென அவரை தாக்கி பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுக்குமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். 

அதற்கு அவர் தர முடியாது என்று கூறியதால், அவரிடம் இருந்த 2 செல்போனையும் திருடிக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து கருணாகரன் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். 

அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போன் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த ராஜா என்ற ராசப்பா (27), கோபாலகிருஷ்ணன் (32), திருவண்ணாமலையை சேர்ந்த உலகநாதன் (47) என்பது தெரியவந்தது.

 அதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்